நுகேகொடை கூட்டம் வெத்து வேட்டு!
நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
நுகேகொடையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
“ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர்.
இந்த கூட்டம் அரசுக்கு சவால் அல்ல. அது செல்லாக்காசு போராட்டம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.





