விளாடிமிர் புட்டினுடன் கைக்கோர்க்கும் வடகொரிய தலைவர் : மேற்குலக நாடுகளுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்!
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு “முழு ஆதரவையும் தெரிவித்துள்ளா்.
அத்துடன் ரஷ்யாவுடன் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“நீதி நிச்சயம் வெல்லும், ரஷ்ய மக்கள் வெற்றியின் வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்” என கிம் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் உறுதியாகக் கைகோர்க்க வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மாஸ்கோவுக்கான வட கொரியாவின் ஆதரவு, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு பெரும் சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)