இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வேஜியன் ஜான் ஃபோஸுக்கு வழங்கப்பட்டது
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வேஜியன் ஜான் ஃபோஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.
இந்த பரிசுக்கு கூடுதலாக, அவர் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் ரொக்கப் பரிசையும் பெறுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
64 வயதான ஃபோஸின் “செப்டாலஜி” தொடர், “ஆலிஸ் அட் தி ஃபயர்” மற்றும் “எ ஷைனிங்” ஆகியவை சிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றது.
1959 இல் நார்வேயில் பிறந்த ஃபோஸ், ஏழு வயதில் ஒரு விபத்தில் உயிர் பிழைத்தார். இதுவே தன்னை ஒரு கலைஞனாக மாற்றிய மிக முக்கியமான குழந்தை பருவ அனுபவம் என்று பின்னர் கூறினார்.
(Visited 5 times, 1 visits today)