ட்விட்டரில் அடுத்த மாற்றம்? எலோன் மஸ்க் அதிரடி முடிவு
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்ற தீர்மானித்துள்ளதாக என்று ட்வீட் செய்துள்ளார்:
விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.
எலோன் மஸ்க் அக்டோபரில் ட்விட்டரை வாங்கியதில் இருந்து தனது பதவிக்காலத்தின் கீழ், நிறுவனம் தனது வணிகப் பெயரை X Corp என மாற்றியுள்ளது, இது சீனாவின் WeChat போன்ற “சூப்பர் செயலியை” உருவாக்க பில்லியனரின் பார்வையை பிரதிபலிக்கிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.