புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் ரிங் – மோதிரம் வடிவில் தொழில்நுட்பம்
புதிதாக ஸ்மார்ட் ரிங் என்ற சாதனம் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இனி மக்கள் அனைவருமே ஸ்மார்ட் வாட்ச்சிலிருந்து ஸ்மார்ட் ரிங்குக்கு மாறப் போகிறார்கள்.
சமீப காலமாகவே சாம்சங், போட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அவர்களின் ஸ்மார்ட் ரிங் சாதனங்களின் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இனி ஸ்மார்ட்வாட்சுக்கு பதில் ஸ்மார்ட் ரிங்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஹெல்த் ட்ராக்கிங் மற்றும் பிட்னஸ் சாதனமாகும். ஏற்கனவே தங்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்கு கோடிக்கணக்கான மக்கள் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை பயன்படுத்தி வரும் நிலையில், விரைவில் அவற்றுக்கு பதிலாக அனைவரும் ஸ்மார்ட் ரிங்கை அணியத் துவங்கப் போகிறார்கள்.
பெரும்பாலான நிறுவனங்களால் உருவாக்கப்படும் ஸ்மார்ட் ரிங்குகள், டைட்டானியம் மற்றும் வைரம் போன்ற உறுதியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ஸ் தன்மையுடன் நீடித்து உழைக்கும் வகையில் இருக்கிறது. இந்த சாதனம் இன்ஃபிராரெட் போட்டோபிளதிமோகிராபி என்ற சென்சார்களுடன் வருகிறது. மேலும் இதில் உடலின் வெப்பநிலையை அறியும் சென்சார்கள், 3 ஆக்சிஸ் ஆக்சிலர்ரோமீட்டர் சென்சார்களும் பொருத்தப் பட்டுள்ளது. இந்த சென்சார்களின் உதவியோடு நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை இந்த சாதனம் துல்லியமாக கண்காணிக்கிறது.
ஒருவரின் தூக்கம், தயார் நிலை, ஆக்டிவிட்டி போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் கண்காணிப்பு சாதனமாக இது வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் உங்கள் உடலில் எதுபோன்ற வெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இது அளவிடுகிறது. இது தவிர உடலில் உள்ள ஆக்ஸிஜன் லெவல், இதயத்துடிப்பு ஆகியவை இடைவெளியின்றி தொடர்ந்து இந்த சாதனம் கண்காணிக்கும்.
ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டால் ஏழு நாட்கள் வரை தொடர்ந்து இயங்கும் பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். இதை எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனுடனும் இணைத்துக் கொள்ளலாம்.