பிரித்தானியாவில் கடும் சிக்கலில் உள்ள தேசிய சுகாதார சேவை – ஆபத்தில் நோயாளிகள்!

பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) மருந்துகளை பெற்றுக்கொள்ள 25 சதவீதம் அதிகளவில் செலவழிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது வரவு செலவு திட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தேசிய சுகாதார சேவையின் உதவிகளை பெற காத்திருக்கும் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையை கையாள பிரித்தானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் முக்கிய மருந்துகளுக்காக பில்லியன் கணக்கான பவுண்டுகளை அதிகமாக செலவிடவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
(Visited 10 times, 1 visits today)