இலங்கையில் பற்பசைக்குள் சிக்கிய மர்மம் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்
கொழும்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக பார்வையாளர் ஒருவர் வந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபருக்கு கொண்டு வரப்பட்ட பற்பசை டியூபில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும், ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளால் அதனை சோதனை செய்து சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)





