செய்தி

பிரித்தானியாவிற்கு வந்த கப்பலில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம்

பிரித்தானியாவில் இதுவரை இல்லாத வகையில், 450 மில்லியன் பவுண்ட் பெறுமதியிலான A வகை போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாழைப்பழங்கள் அடங்கிய கண்டெய்னரிலேயே இதனை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி தென் அமெரிக்காவிலிருந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திற்கு வந்த கப்பலின் கண்டெய்னரில் 5.7 டன் எடை கொண்ட கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் ஜேர்மனியில் உள்ள ஹம்பர்க் நகருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டெய்னரை பொலிஸார் சோதனையிட்ட போது அந்த கண்டெய்னருக்குள் இருந்த பார்சல்களில், வாழைப்பழங்களுக்கு அடியில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை சிக்கியதிலேயே இதுதான் மிக அதிக அளவு போதைப்பொருள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி