ஓடும் பேருந்தை நிறுத்தி சாரதியை கடத்திய மர்மக் கும்பல்!

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (24.09) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதியே இவ்வாறு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றில் குறித்த சாரதி கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யார் என்ன காரணத்திற்காக இந்த கடத்தலை மேற்கொண்டனர் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)