செய்தி விளையாட்டு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட IPL மெகா ஏலம் இன்று

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை IPL மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளனர். அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

இந்த ஆண்டு ஏலத்தில் கூடுதல் சிறப்பாக பல இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன் என்று இந்திய அணிக்காக ஆடி வரும் முக்கிய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது. மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!