உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் mpox தொற்று : பலி எண்ணிக்கை உயர்வு!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் mpox தொற்று அல்லது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் நோயினால் சுமார் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘குரங்கு பாக்ஸ்’ வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அதை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தது.
இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஆபிரிக்க நாடுகளின் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)