வாக்குவாதம் முற்றியதில் மகளை கடித்து வைத்த தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அடம்பிடிக்க, அவருக்கும் அவரது தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.
தாயைத் தள்ளிவிட்டு மகள் வெளியேற முயல, கடுங்கோபமடைந்த அந்தத் தாய், மகளுடைய கையைப் பிடித்து பலமாகக் கடித்துள்ளார்.
அந்த இளம்பெண் அணிந்திருந்த ஜாக்கெட், சட்டையைத் தாண்டி அவளது கையில் காயம் ஏற்பட, பொலிஸில் புகாரளித்துள்ளார் அவர்.
அந்தத் தாய் மகளைத் தாக்கியதாக முடிவு செய்துள்ள நீதிமன்றம், அவர் பெரும் தொகை ஒன்றை அபராதமாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)