உலகில் மிகவும் விசித்திரம் நிறைந்த ஆபத்தான நதி – அமேசான் காடுகளில் கண்டுபிடிப்பு
உலகில் வேறு எங்கும் காண முடியாத மிகவும் விசித்திரமான ஒரு இயற்கை நிகழ்வு பெரு நாட்டிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் வெப்பத்தால் நீரை கொதிக்க வைக்கும் நதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை நிகழ்வுக்கு ஷனாய்-டிம்பிஷ்கா (Shanay-Timpishka) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நதியின் நீரில் பதிவான வெப்பநிலை பெரும்பாலும் 80 பாகை செல்சியஸ் முதல் 95 பாகை செல்சியஸ் வரை உள்ளது.
சில இடங்களில் நீரின் கொதிநிலை வரைக்கும் வெப்பம் செல்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விசித்திரமான இந்த நதியில் தவறி விழும் மீன்கள், விலங்கினங்கள் உடனடியாக இறந்து விடுகின்றன.
இந்த நதியின் புவியியல்சார் பண்புகள் ஆய்வாளர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு தீவிரமான வெப்பத்திற்கு எரிமலைகள் அல்லது டெக்டோனிக் தட்டு எல்லைகள் காரணமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த நதியோ அருகிலுள்ள எரிமலை அமைப்பிலிருந்து 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நதி ஆழமான நீர்வெப்ப சுழற்சி (deep hydrothermal circulation) என்ற செயல்பாட்டால் வெப்படைவதாக, மியாமி பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ரிலே ஃபோர்டியர் தெரிவித்துள்ளார்.
மழைநீர் பூமிக்கடியில் ஆழமான பிளவுகள் வழியாகச் சென்று, புவிவெப்ப ஆற்றலால் (Geothermal Energy) அதி தீவிரமாக வெப்பமடைகிறது.
இந்தக் கொதிக்கும் நீர் மீண்டும் பிளவுகள் வழியாக வேகமாக மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டு, இந்த அபூர்வமான, கொடூரமான நதியாக ஓடுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நதிக்கு அருகில் உள்ள மரங்கள் கருகியிருப்பதையும், மண் ஈரப்பதம் இன்றி இருப்பதையும் ஆய்வுக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.





