உலகம் செய்தி

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நெயில் பாலிஷ்

விலை உயர்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் போன்றவற்றை கேள்விபட்டிருப்போம்.

அதனை வி.ஐ.பி.கள் சிலர் அதிக தொகை கொடுத்து வாங்குவதும் உண்டு. அந்த வரிசையில் தற்போது ‘நெயில் பாலிஷ்’ இடம்பெற்றுள்ளது.

பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் நெயில் பாலிஷ் அறிமுகமாகி வருகிறது.

அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும்.

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கிய இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அதன் உள்ளே 267 கார்ட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருக்கும்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி