உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல!
உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நம் நாட்டில் ஹவாலா மற்றும் உண்டியல் முறை சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அது எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.
எனவே, இந்த ஹவாலா மற்றும் உண்டியல் முறை மூலம் சர்வதேச அளவில் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் ஜூன் 2024 முதல் 12 மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
(Visited 1 times, 1 visits today)