அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு பதற்ற நிலை விரைவில் சீராகும்: இலங்கை நம்பிக்கை!

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்புகின்றோம். சிலவேளை நீடித்தால்கூட அதனால் மீனவர்களுக்கு தாக்கம் ஏற்படடாத வகையில் உரிய தலையீடு மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு கடற்றொழில், நீரில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது,

“ ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அதன்பின்னரும் நெருக்கடி ஏற்பட்டால் மீனவர்களுக்கு தடையின்றி டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படுமா, அதற்குரிய திட்டம் உள்ளதா” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்,

“ எமது நாட்டில் சிறிய படகுகள்கூட கடலுக்கு செல்வதற்கு வழியின்றி , மீனவர்கள் தவித்துக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றோம்.

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படவில்லை. படகுகள் கடற்கரைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்தன.

எனினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கரையில் இருந்த படகுகள் தொழிலுக்காக கடலுக்குச் சென்றன.” என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஓரிரு வாரங்களுக்குள் சீராகும் என நம்புகின்றோம்.

எனினும், மீனவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.”எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!