இலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்தி!
இலங்கை – அறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 23 அன்று, அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல்களுக்கான திட்டமிடல்கள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அமெரிக்க தூதரகம் தொடர்புடைய பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.
எவ்வாறாயினும், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.





