ஆட்டம் ஆரம்பம்: களத்தடுப்பை தேர்வு செய்தது இங்கிலாந்து! (Update)
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.40 மணிக்கு ஆரம்பமானது.
மழை காரணமாக தாமதித்தே போட்டி ஆரம்பமானது.
இதனால் 17 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
…………
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் முதல் ஆட்டம், கண்டி -பல்லேகல மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவிருந்தது.
எனினும், சீரற்ற காலநிலையால் போட்டி தாமதமாகியுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் போட்டி கைவிடப்படலாம்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் ODI தொடரை இங்கிலாந்து 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.





