இளம் பெண்ணை தேடிவந்த நபர் அடித்துக் கொலை

மாத்தறை, ரொடும்ப பிரதேசத்தில் வசிக்கும் பட்டதாரி இளம்பெண் ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் பட்டதாரிக்கும் இடையில் நட்புறவு இருந்ததாகவும், அந்த நட்பின் அடிப்படையிலேயே அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் ரொடும்ப பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)