தென் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த நபர் கைது!
தென் மாகாணத்தில் வாழும் மக்களை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் சீடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய பயாகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
குறித்த நபர் தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொலைச் சம்பவமொன்றை மேற்கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான சீடன் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





