போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் நடந்த பேரணியில் தீக்குளித்த நபர்
காஸாவில் போர் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் உடனடி போர்நிறுத்தத்தைக் கோரி வாஷிங்டனிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.
அப்போது ஒரு நபர் தன்னைத்தானே தீக்குளித்து எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றுள்ளார்.
மேலும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்நபரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த நபருக்கு கையில் மட்டும் தீ பரவியதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
பேரழிவுகரமான போருக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்புகள் இருந்தன.
அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியபோது போர் மூண்டது, இதன் விளைவாக 1,205 பேர் கொல்லப்பட்டனர்.
(Visited 5 times, 1 visits today)