அமெரிக்காவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸ்களில் வைத்த நபர்
அமெரிக்காவில் 78 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சூட்கேஸ்களில் துண்டிக்கப்பட்ட எலும்புகளும் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வில்லியம் லோவ் ஜூனியர் என அடையாளம் காணப்பட்ட கைது செய்யப்பட்ட நபர், அவரது 80 வயது மனைவி அய்டில் பார்போசா ஃபோன்டெஸின் மரணத்தில் கொலை மற்றும் உடலை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டெல்ரே கடற்கரையில் உள்ள கடலோர நீர்வழிப்பாதையில் சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று மிதந்ததை அடுத்து இந்த கொலை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் படி, தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





