யாழில் பேரூந்திலிருந்து இறங்கியவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் என்ற 50 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)