நிபா வைரஸ் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், பொது இடங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு “முன்னுரிமை நோய்க்கிருமி” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக இறப்பு விகிதம் மற்றும் வெடிப்பு பரவக்கூடிய வேகம் அதிகரித்துள்ளதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் கேரளப் பகுதியில் வைரஸ் கடைசியாக அடையாளம் காணப்பட்டிருந்தது. அப்போது குறித்த வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நோய் கிருமி குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)