மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!
“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியிலான தடை இருந்தால் அதனை நீக்க வேண்டும்.
அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு நடத்தினால் அரசாங்கம்மீதான மக்களின் நம்பிக்கை எவ்வாறுள்ளது என்பது தெரியவரும்.”- என்றார் ரஞ்சித் மத்தும பண்டார.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளன.





