துருக்கியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி கைது!
புத்தாண்டு கொண்டாட்டங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த பிரதான சூத்திரதாரியை துருக்கி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
தென்கிழக்கு நகரமான மாலத்யாவில் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய கூட்டு நடவடிக்கையில் இப்ராஹிம் புர்டகுசின் (Ibrahim Burtakucin) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் துருக்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மோதல் மண்டலங்களில் நடந்து வரும் சண்டையில் சேர வாய்ப்பு தேடி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஐ.எஸ் அமைக்கு சொந்தமான டிஜிட்டல் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வெளியீடுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக பண்டிக்காலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஏறக்குறைய நூறு பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





