இலங்கையில் மிகக் குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு!
இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அங்கு 8.0 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதே நேரத்தில், இன்று காலை பண்டாரவளைப் பகுதியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், பதுளையில் 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.





