வட அமெரிக்கா

அமெரிக்காவில் தாதியின் அலட்சிய போக்கால் பரிதாபமாக பறிபோன 10 பேரின் உயிர்!!

அமெரிக்காவில் தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இடமபெற்றுள்ளது.

குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அதற்கு பதிலாக குழாய் நீரை நிரப்பி வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாகவே தொற்று ஏற்பட்டு குறித்த நோயாளிகள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்