பாகிஸ்தானில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய தங்க களஞ்சியம்!

பாகிஸ்தான், கடுமையான நிதிச்சிக்கலில் இருக்கும் சூழ்நிலையில், சிந்து நதியின் படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கக் களஞ்சியமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ரூ.80,000 கோடியாகும் என்றும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிந்து நதி, இந்தியாவின் இமயமலையிலிருந்துதான், தங்கத்தை சுமந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. வெள்ளப் பெருக்கில் தங்கம் நதிக்கரைகளில் சேர்ந்து சிறிய துகள்களாக மற்றும் Placer Gold உருவாகிறது.
பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிச் சிக்கலில் உள்ளது. 2024 டிசம்பரில், நாட்டின் மொத்த வெளிநாட்டு நிதி கையிருப்புகள் $5.43 பில்லியன் மட்டுமே இருந்தன. ஒருவேளை இந்த தங்கம் அகழ்வுத் திட்டம் வெற்றியடைந்தால், அந்நாட்டின் நிதி நிலமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)