நோர்வே மன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
நோர்வே மன்னர் ஹரால்ட் (89) (Harald) ஸ்பெயினில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அங்கிருந்து வெளியேறுவார் என அரச அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் மூத்த அரச தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை டெனெரிஃப் (Tenerife) தீவில் இருந்தபோது காலில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும், நீரிழப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சையில் இருந்த அவர் இன்று வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மீளவும் அரண்மனைக்கு எப்போது திரும்புவார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.





