உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; முன்னாள் ஜனாதிபதிகளுக்குள் வெடித்த கருத்து வேறுபாடு
அமெரிக்காவில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு ஒன்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளிடையே மாறுபட்ட நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின மற்றும் லத்தீன் இன மாணவர்களின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் “உறுதியான நடவடிக்கை கொள்கை” என்ற பெயரில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் இனங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் கல்லூரி விண்ணப்ப படிவங்கள் நடைமுறையில் இருந்து வந்தன.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இனி கல்லூரி விண்ணப்ப படிவங்களில் மாணவர்களின் இனங்களை அறிந்து கொள்ளும் முறை நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
செயல்முறையில் இருந்து வந்த இந்த நடைமுறை மூலம் நானும் என்னுடைய மனைவி மிச்செல் உட்பட பல்வேறு மாணவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க அனுமதித்தது.மேலும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு நாங்களும் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் மற்றும் நாங்களும் அனைத்து தகுதிகளுக்கும் உடையவர்கள் என்பதை நிரூபிக்க உதவியது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தால் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களைப் போன்றவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்க வைக்க வேண்டிய தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக டொனால்ட் டிரம்ப் அவரது சமூக வலைதளமான ட்ரூத்-தில் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும், இது அனைவரும் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு.
இனி அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற நிலைக்கு நாம் திரும்புகிறோம் என கருத்து பதிவிட்டுள்ளார்.