கொழுப்பு குறைய ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் முறை

இன்றைய காலகட்டத்தில், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறார்கள். இதற்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுவது நடைபயிற்சி. தினமும் 10,000 அடிகள் நடப்பது, எடை இழப்புக்கு இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நேரமின்மை காரணமாக, பலரால் இந்த இலக்கை எல்லோராலும் அடைய முடியவில்லை. அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தினம் 10 ஆயிரம் அடிகள் நடப்பதை விட சிறந்த ஒரு நுட்பத்தை ஜாப்பானியர்கள் பின்பற்றுவது குறித்து சமீபத்தில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லிமா மகாஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், இந்த அற்புதமான நுட்பத்தைப் பற்றி அவர் கூறியுள்ளார்.
ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறப்பு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார். இதற்கு ‘Interwal Walking’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் ஜிம்மிற்குச் செல்லவோ அல்லது எடை இழப்புக்கு மிகவும் கடினமான உடற்பயிற்சியும் செய்யவோ தேவையில்லை. இதற்கு குறிப்பிட்ட முறையை பின்பற்றி நடக்க வேண்டும்.
நடைபயிற்சியில் ஜப்பானியர்கள் பயன்படுத்தும் டெக்னிக்
இதற்கு, முதலில் 3 நிமிடங்கள் மெதுவாக நடக்கவும் (மெதுவான நடை)
பின்னர் 3 நிமிடங்கள் வேகமாக நடக்கவும் (துரித நடை)
மொத்தம் 30 நிமிடங்களுக்கு இதே போன்று 5 முறை வேகத்தை அதிகரித்து குறைத்து நடக்கவும்.
நீங்கள் ஒரு தொடக்கநிலையாளராக இருந்தால், முதலில் 3 சுற்றுகளில் (18 நிமிடங்கள்) தொடங்கி, படிப்படியாக அதிகரிக்கவும்.
ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் இந்த நுட்பம் எவ்வாறு நன்மை பயக்கும்?
ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், சாதாரண நடைபயிற்சி அல்லது ஓடுவதை விட, வேகத்தை குறைத்து, அதிகரித்து நடப்பது வேகமாக கலோரிகளை எரிக்கிறது. இந்த முறை ஒரே வேகத்தில் தொடர்ந்து நடப்பதை விட அதிக கொழுப்பை எரிக்கிறது, இதன் காரணமாக குறைந்த நேரத்தில் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.
இண்டர்வெல் வாக்கிங் மூலம் கிடைக்கும் பிற நன்மைகள்
1. இண்டர்வெல் வாக்கிங் மூலம் உயர் இரத்த அழுத்தம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது என்று லிமா மகாஜன் கூறுகிறார். அதாவது, இது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
2. இந்த முறையில் நடப்பது சர்க்கரை அளவை கட்டுபடுத்த அதிகம் உதவுகிறது. இதன் காரணமாக இந்த நுட்பம் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
3. முழங்கால் அல்லது முதுகுவலி உள்ளவர்களுக்கு, இது மிகவும் பாதுகாப்பான முறையாகும், ஏனெனில் இது போன்ற நடைபயிற்சி மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
4. இவை அனைத்தையும் தவிர, இண்டர்வெல் வாக்கிங் நடைபயிற்சி கால்களை பலப்படுத்துகிறது மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது.
உங்களால் 10,000 படிகள் நடக்க முடியாவிட்டால், தினமும் 30 நிமிடங்கள் மட்டும் உடற்பயிற்சி செய்து இந்த முறையைப் பின்பற்றலாம். குறுகிய காலத்தில் சிறந்த பலன்களைப் பார்க்க முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர் லிமா மகாஜன் கூறுகிறார்.