இஸ்ரேல்- காசா போர்: அமெரிக்காவின் இரட்டை வேஷம்
இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கும்போது கூட அமெரிக்கா இஸ்ரேலின் இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை வலுப்படுத்த விரும்புகிறது.
இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை “விரைவாக கையகப்படுத்த” கோரியதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
காஸாவில் அக்டோபர் 7 முதல் குறைந்தது 28,858 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 68,667 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாக நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)