விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்து இந்திய அரசு எடுத்துள்ள தீர்மானம்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை ஐந்து வருட காலத்திற்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதாலும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதற்கான ஆதரவுத் தளத்தை அதிகரிப்பதாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஐப் பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கருதுவதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)