இலங்கையை உலுக்கிய சம்பவம் – கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தாவின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு நேற்று மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்தா எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கிளப் வசந்தாவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.
(Visited 27 times, 1 visits today)