இலங்கை

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் – மீள் விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ,  சனத் நிஷாந்த,  மிலான் ஜயதிலக்க உள்ளிட்டவா்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிா்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் சந்தேகநபா்கள் தொடா்பில் சட்டமா அதிபாின் ஆலோசனை பெறப்பட்டதாகவும்,  அந்த ஆலோசனையை சவாலுக்கு உட்பட்டுத்தி மேன்​முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதன்போது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சமா்ப்பணங்களை ஏற்றுக்காண்ட நீதவான்,  சம்பவம் தொடா்பில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டாா்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!