உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – போரில் கடும் நெருக்கடி
உக்ரைனின் இராணுவ வளங்கள் பெருமளவு தீர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்துள்ளார்.
கிய்வ் பகுதியில் இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்ற ஒரு கடுமையான எதிர் தாக்குதலை உக்ரைன் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘மேற்கத்தேய நாடுகளின் விரிவான உதவிகள் இருந்தபோதிலும், உக்ரைனின் ஆயுதப்படையினரால் இலக்கை அடைய முடியவில்லை” ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த போரின் ஆரம்ப முடிவுகள் உக்ரைனின் இராணுவ வளங்கள் தீர்ந்துவிட்டதைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





