சுவிஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள பிட்ஷ் (Bitsch) கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்கு மூண்ட தீயை அணைக்க 150 தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.
200க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ பரவுவதைத் தடுக்கப் பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தீயணைப்பாளர்களுடன் பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் அதற்கு உதவுகின்றன.
மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. கட்டடங்களுக்கும் பாதிப்பில்லை.
மூண்ட காரணம் விசாரிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 100 ஹெக்டர் அளவிலான காடு தீயில் சேதமடைந்தது.





