பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 726,000 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன.
இந்த எண்ணிக்கை சென்ற 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் குறைவாகும். அதேவேளை, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும்.
அதுவே, 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதம் வீழ்ச்சியாகும். வருடம் ஒன்றில் 726,000 குழந்தைகள் பிறப்பது பிரான்ஸில் இரண்டாம் உலகப்போரின் பின்னர் பதிவாகிய மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையாகும்.
(Visited 7 times, 1 visits today)