வாக்குவாதம் நீண்டதில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவன்!

வெலிமடை டயரபா தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.டயரபா தோட்டம், மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் கணவன் மனைவியை காலால் உதைத்து பின்னர் கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)