மனைவியைக் கொன்ற கணவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 12 வருடங்களாக பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் தவிர்த்த நபரொருவரை மாத்தறை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வெலிகம-ஹேன்வல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்தார்.
அம்பலாங்கொடை – மிட்டியகொட பிரதேசத்தில் வசிக்கும் இவர், 2012ஆம் ஆண்டு தனது 37 வயதுடைய மனைவியை அடித்து கொலை செய்திருந்தார்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்த மெட்டியகொட பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஒரு வருடத்தின் பின் பிணை கிடைத்த பின்னர் காணாமல் போயிருந்த அவர் பலப்பிட்டிய மேல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி விசாரிக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், பொலிசார் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.
சந்தேக நபர் வெலிகம விகாரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.
சந்தேகநபர் தப்பியோடியதாகவும், பொலிஸார் அவரை சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.