இந்தியா

சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மனைவியுடனான தகராறில் கத்தரிக்கோலால் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் பிரேம் நகர் காலனியைச் சேர்ந்தவர் ஷாஹித் ஹுசைன்.தையல்காரராக இவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று Fried Chicken வாங்க வேண்டும் என மனைவி நூர் பானோவிடம் (46) பணம் கேட்டுள்ளார்.

ஆனால், நூர் அவருக்கு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து நூர் வெளியே சென்று Chicken வாங்கி வந்துள்ளார். அதன் பின்னர் நூர் பானோவுக்கும், ஷாஹித்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

Fried Chicken: He did not give money to buy fried chicken.. The husband who  did not kill his wife – Telugu News | Uttar Pradesh: Man Kills Wife With  Scissors After Being

 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷாஹித், கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.இதனால் ரத்த வெள்ளத்தில் நூர் சரிந்து விழுந்தார். இதனையடுத்து நூர் பானோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஷாஹித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!