சவப்பெட்டியில் இருந்த கணவன் – காதலனுடன் சென்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
சவப்பெட்டியில் படுத்திருந்த யுவதியின் திருமணமான கணவன், காதலனுடன் பேய் வீடு ஒன்றுக்கு சென்ற போது, அவரை தாக்க முற்பட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்ய நவகமுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை 2000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ ரணவல பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 12 இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நவகமுவ, ரணல பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பொசன் போயாவை முன்னிட்டு பேய் வீடொன்றை நிர்மாணித்துள்ளதுடன், 21 வயதுடைய பெண்ணும் அவரது காதலனும் மற்றுமொரு இளைஞர் குழுவும் அதனை பார்வையிட நேற்று வந்துள்ளனர். (23)
பேய் வீட்டிற்குள் சென்ற குழுவினர் உள்ளே நுழைந்தபோது, சவப்பெட்டியில் கிடந்தவர் யுவதியின் திருமணமான கணவர் என்றும், காதலனுடன் வந்திருப்பது தனது மனைவி என்றும் அடையாளம் காணப்பட்டது.
சடலமாக மாறுவேடத்தில் வந்த கணவன் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தாக்க முற்பட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக பிரிந்து வாழவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தாக்க முற்பட்டதையடுத்து, அவருடன் இருந்த ஏனைய நபர்களும் பேய் வீட்டில் இருந்த நபரை தாக்க, பேய் போல் தோன்றிய ஏனைய இளைஞர்கள் மற்ற குழுவினரை தாக்கியுள்ளனர்.
இதன் பிரகாரம், பேய் வீட்டை ஒழுங்குபடுத்தும் குழுவினர் முதலில் நவகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு, மற்றைய குழுவினர் பின்னர் முறைப்பாடு செய்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.