ஐரோப்பா

கிரீஸில் காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி!( வீடியோ)

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், நிலச்சரிவு ஏற்பட்டது. பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 20க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த சூழலில், பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சூறாவளி பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேரை காணவில்லை. கிரீஸ் நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்

https://twitter.com/i/status/1699216830794203151

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்