Humanity 1 ஐக் கைப்பற்றியமைக்கு மனிதாபிமான மீட்பு குழு எதிர்ப்பு!

மனிதாபிமான மீட்புக் குழுவான SOS ஆனது புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் மீட்புக் கப்பலான Humanity 1, ஐக் இத்தாலி கைப்பற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
The Humanity 1 சர்வதேச சட்டத்தை பின்பற்றுகிறது என்றும், குரோடோனின் தெற்கு துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு, மீட்கப்பட்ட 77 பேரை இறக்கிய பிறகு, கைப்பற்றப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த கப்பலை கைப்பற்றுவதற்கான காரணம் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மீட்பு பணியின்போது பலர் நீரில் குதிக்கவேண்டிய நிலை இருந்ததாகவும் sos தெரிவித்துள்ளது.
இத்தாலியின் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கம் புதிய கடுமையான விதிகளைப் பின்பற்றாத படகுகளைக் கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)