ஐரோப்பா

துருக்கியில் சில மணி நேரங்களில் பதிவான உச்ச வெப்பநிலை!

துருக்கியில் வெப்பநிலை சில மணிநேரங்களுக்குள் 42C ஆக உயரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பயணிப்போருக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.

குறித்த எச்சரிக்கை பதிவில், “கோடை மாதங்களில் தீவிர வெப்பநிலை துருக்கியின் பல பகுதிகளை பாதிக்கலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெப்ப அலையின் பிடியில் இருக்கும் துருக்கி மற்றும் பிற விடுமுறை பகுதிகளுக்குச் செல்லும் போது, ​​வெயிலின் தாக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் NHS பகிர்ந்துள்ளது.

உங்களால் முடிந்தால் வெப்பத்திலிருந்து விலகி இருங்கள். நீங்கள் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நிழலில் இருங்கள்.

சன்ஸ்கிரீன், தொப்பி மற்றும் லேசான ஆடைகளை அணியுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!