அமானுஷ்யத்தின் அதி உச்ச விம்பம் : கற்பனைக்கும் எட்டாத துன்பங்களை அனுபவிக்கும் வடகொரிய பெண்கள்!
தப்பியோடிய வட கொரியர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும்பொழுது மிகவும் மோசமான துன்பங்களை அனுபவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாழும் நரகத்தை அவர்கள் எதிர்கொள்வதாக அரசியல் அவதானிகள் அடையாளப்படுத்துகின்றனர்.
வட கொரியாவிலிருந்து தப்பித்து ஆறு முறை திருப்பி அனுப்பப்பட்ட ஒரு பிரிவினையாளரின் திகிலூட்டும் சாட்சியம் முக்கிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
குறித்த சாட்சியம் தற்போது மறைந்து வாழ்கின்ற நிலையில் அவருடைய பெயர் விபரங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் கூறிய சில முக்கிய விடயங்களை மாத்திரம் பிரசூரித்துள்ளன.
வடகொரியாவில் தன்னுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களில் பெரும்பாலானோர் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
காவலர்கள் பெண்களை நீண்ட காலத்திற்கு குந்திய நிலையில் இருக்கச் செய்வதன் மூலம் கருச்சிதைவுகளைத் தூண்ட முயற்சிப்பார்கள் அல்லது கனமான வாளிகளில் தண்ணீரை எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் மருத்துவமனைக்கு இழுத்துச் செல்வார்கள் எனபும் புதிதாக பிறந்த பிள்ளைகளை கொலை செய்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் பல பெண்கள் அங்கு பாலியல் பொம்மைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென் கொரியாவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான இடைக்கால நீதி பணிக்குழு (TJWG) படி, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் மட்டும் 600 பேர் வரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.