கடும் வெப்பம் காரணமாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சுவாச நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த கடும் வெப்பம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் கடின உழைப்பின் காரணமாக பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன டி சில்வா, அதிக வெப்பத்தை எதிர்கொள்வதால் நீர்ச்சத்து குறைவைத் தவிர்ப்பதற்காக இயன்றளவு தண்ணீரை அருந்துமாறு தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)