கேரி கானலை பதவியில் இருந்து நீக்கிய ஹெய்ட்டி ஆட்சிக்குழு : எழுந்துள்ள புதிய சிக்கல்!
ஹெய்ட்டியின் ஆட்சிக் குழு, கேரி கானலை அவரது பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. சபையின் 9 உறுப்பினர்களில் 8 பேரின் கையொப்பத்துடன் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கானலுக்குப் பதிலாக பிரபல தொழிலதிபரும் ஹைட்டி செனட் வேட்பாளருமான அலிக்ஸ் டிடியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியான கானெல், நாட்டின் பாதுகாப்பு நிலைமையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஹைட்டியின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நாட்டில் வீதி மோதல்கள் மற்றும் பல்வேறு ஆயுதக் கும்பல்களுக்கு இடையில் மோதல்கள் பரவி வருவதால் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இது இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சரியான சூழலை உருவாக்குவது அவருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
ஆனால் அங்கு அவர் தோல்வியடைந்தார். இதற்கிடையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கோனெல் கூறுகிறார். இது ஹைட்டியின் எதிர்காலத்தை மேலும் சிக்கலாக்கும் என்கிறார்.