ரஷ்யாவின் இராணுவ சரக்கு ரயிலை தாக்கி அழித்த குழுவினர்!
கிரெம்ளினில் இருந்து தென்கிழக்கே 60 மைல் தொலைவில் ரஷ்ய “இராணுவத்தின் சரக்கு ரயில் தாக்கப்பட்டுள்ளது.
வோஸ்கிரெசென்ஸ்க் ரயில் டிப்போவில் குறித்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நாசவேலை கும்பல் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.
உக்ரைனின் GUR இராணுவப் புலனாய்வு நிறுவனம், வெடிவிபத்தில் சரக்கு ரயிலில் இருந்த வண்டிகள் அழிக்கப்பட்டதை உறுதிசெய்தது,
மேலும் ரஷிய இராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை மாற்றுவதற்கு ரயில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யப் பணியாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.





